ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
இயேசு விடுவிக்கிறார் ^

English Version

இயேசு விடுவிக்கிறார் - ஷாலோம் இணைந்து ஊழியப்பாதையில்

 

 

லோம் ஊழிய ஆரம்ப நாட்கள் வரை சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களது ‘ இயேசு விடுவிக்கிறார்’ ஊழியங்களை நான் அறிந்திருந்தாலும் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு இலலை.  ஒன்று மட்டும் தெரியும்.  பாரத தேசத்தில் ஊழியம் செய்யும் அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களையும், ஊழியங்களையும், மிஷனெரிகளையும், சுவிசேஷகர்களையும் நேசித்து, ஜெபித்து, தாங்கும் அன்பான தேவ ஊழியர் என்பதுதான்.

மிஷனெரி ஊழிய ஆதரவு

1990 டிசம்பர் 29-ம் தேதி முதலாவது எங்களை தங்கள் மிஷனெரியாக பொறுப்பேற்று திறப்பின் வாசல் ஜெபத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.  அதன் பின்பாக வருடத்திற்கு 2....5 என்று சுதேச ஊழியர்களை தாங்க பொறுப்பேற்றார்கள்.  இதுவரை இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் மூலமாக 38 ஊழியர்களை பொறுப்பெடுத்து ஜெபித்துத் தாங்கி வருகிறார்கள்.  ஊழியர்களின் அறிக்கைகளை மாதந்தோறும் அனுப்புகிறோம்.  திறப்பின் வாசல் ஜெபம், உபவாச ஜெபம் இவைகளில் ஊழியர்களுக்காக

     

கிராம ஆலயங்கள்

1993-ல் அக்டோபர் மாதம் முதன்முறையாக பணித்தளம் வந்தபோது பொருளாதாரத்தில் மிகவு் கஷ்டப்பட்டு ரூ.100, ரூ.500 என சேர்த்துக் கட்டப்பட ஹிரோலா ஆலயத்தைப் பார்த்தார்கள்.  மேலும் பந்தல், குடிசை, மர நிழல்கள் இவற்றில் ஆராதிக்கும் மக்களைக் கண்டு கண்கலங்கினார்கள்.  அன்று இரவு ஆவியானவர் அவர்களுடன் பேச, முதலாவது தன் சொந்த பணத்திலிருந்து முதல் ஆலயம் கட்டிக்கொடுக்கவும் பின்பு அநேக ஆலயங்களை கட்டிக்கொடுக்கவும் தேவன் பாரம் தந்தார்.  அதன்படியாக 44 கிராம ஆலயங்கள் இதுவரை ‘இயேசு விடுவிக்கிறார்’ ஊழியங்கள் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இயேசு விடுவிக்கிறார் மூலம் 2009 ஆண்டு கட்டப்பட்ட ஆலயங்களை காண இங்கு கிளிக் செய்யவும்

 விடுதலைப் பெருவிழா நற்செய்திக் கூட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் ‘இயேசு விடுவிக்கிறார்’ குழுவினருடன் சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்கள் பணித்தளத்திற்கு வருகை தந்து விடுதலை நற்செய்திக் கூட்டங்களை நடத்தித் தருகிறார்கள்.  1993-ம் வருடம் முதன்முறையாக பல்வேறு கிராமங்கிளல் 300, 500 என 2000 பேர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.  தொடர்ந்து 1996-ல் 7000 பேர்களும் 1997-ல் 14,000 பேர்களும், 1998-ல் 18,000 பேர்களும் விடுதலையடைந்து ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.  போக்குவரத்து வசதியே இல்லாமலும், விளம்பரம் இல்லாமலும் குடிகாரர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் வாழும் மக்கள் மத்தியில் இத்தனை திரள் மக்களை தேவன் கொண்டு வந்தார்.  நூற்றுக்கணக்கான அற்புதங்கள் மூலமாக சுகமடைந்தவர்கள் ஏராளம்.  திருடர்கள், கொள்ளையர்கள், மந்திரவாதிகள், குடிகாரர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.  அந்தப்பட்டணத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று.

     

மூப்பர்களுக்கான சிறப்பு முகாம்

இரட்சிக்கப்பட்ட இளம் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய முகாமும், குறிப்பாக 1997 ஏப்ரல் மாதம் 1200 பேர்களுக்கு மூன்று நாட்கள் ஜெபமுகாமும் நடத்தப்பட்டது.  சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுடன் சகோ. விக்டர் P. லாரன்ஸ் அவர்களும் நடத்தித் தந்தார்கள்.  முகாமில் அனைவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றார்கள்.  சொந்த பீல் ஜனம் இரட்சிக்கப்பட ஜெப ஆவி ஊற்றப்பட்டது.  ஆத்தும ஆதாயம் செய்ய ஒப்புக்கொடுத்தார்கள்.  பீல் மக்கள் மத்தியில் நடைபெறும் ஷாலோம் ஊழியத்தில் இந்த முகாம் எழுப்புதலைத் தந்த நாட்களாகும் என்பதில் சந்தேகம் இல்லை.  அதுபோல ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ஆயிரம் மூப்பர்களுக்கு சிறப்புக் கூட்டங்கள் நடத்துவதுண்டு.  கடந்த 2000 நவம்பரில் நடைபெற்ற குஜராத் மூப்பர்கள் கூட்டத்தில் சுமார் 3000 மூப்பர்கள் கலந்துகொண்டு ஆவியானவரின் அளவில்லா அபிஷேகத்தைப் பெற்றார்கள்.

 சுதேச ஊழியர்களுக்கான அக்கினி முகாம்

சுதேச ஊழியர்களை பலப்படுத்தி, விசுவாசத்தில் உறுதிப்படுத்தி ஆலோசனை வழங்கும்படியாக அக்கினி முகாம்கள் வருடந்தோறும் ‘இயேசு விடுவிக்கிறார்’ மூலமாக நடத்தப்படுகிறது.  சுதேச ஊழியர்களை பலப்படுத்த தேவன் சகொ. மோகன் சி. லாசரஸ் அவர்களையும் இயேசு விடுவிக்கிறார் குழுவினர்களை தேவன் வல்லமையாக பயன்படுத்தி வருகிறார்.  ஊழியர்கள் ஆழமான அர்ப்பணிப்பையும், தரிசனங்களையும், அக்கினி அபிஷேகத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

நடத்தப்பட்ட அனைத்து நற்செய்திக் கூட்டங்கள், மூப்பர்கள் கூடுகை, சுதேச ஊழியர்கள் கூடுகை எல்லாவற்றுக்கும் தேவையான செலவீன பொறுப்புகளை ‘இயேசு விடுவிக்கிறார்’ முழுமையாகவும், சில கூட்டங்களின் பாதி பொறுப்பையும் எடுத்து உதவி1செய்துள்ளார்கள்.  தேவனைத் துதித்து, நன்றி சொல்லுகிறோம்.

     

மேலும் ‘இயேசு விடுவிக்கிறார்’ பொறுப்பெடுத்த சில நற்பணிகள்

1997 ஊழிய விரிவாக்கத்தை அறிந்து ஆவியானவரின் ஏவுதலால் ரூபாய் 10 இலட்ச மதிப்பில் சிறப்புத் திட்டங்கள் மூலம் அர்மதா ஜீப், 5 சுதேச ஊழியர்களுக்கு பஜாஜ் M 80 வாகனங்கள், 30 சைக்கிள்கள், 10 கிராம ஆலயங்கள், Sound System, வேத புத்தகங்கள் மற்றும் சுவிசேஷ பங்குகள் யாவும் வினியோகிக்கப்பட்டன.

 1998-ம் ஆண்டில் 5 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டன.  1999-ம் ஆண்டு 10 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டு, 12 பஜாஜ் M 80  வாகனங்களும்  கொடுக்கப்பட்டன.

2000-ம் ஆண்டில் இராஜஸ்தானில் 12 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டு 3000 வேத புத்தகங்கள் வழங்கப்பட்டன.

2001-ம் ஆண்டில் மத்தியபிரதேச மாநிலத்தில் 12 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டு 10,000 வேத புத்தகங்களும், 300 ஊழியர்களுக்கு சைக்கிள்களும், 5 மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

2002-ம் ஆண்டில் பணித்தளத்தில் 12 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டு சுதேச ஊழியர்களுக்கு 105 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.  பணித்தளத்தில் ஊழியத்திற்காக Bolero Jeep  வாங்கிக் கொடுக்கப்பட்டது.

2003-ம் ஆண்டில் பணித்தளத்தில் 12 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டு சுதேச ஊழியர்களுக்கு 20 சைக்கிள் வாங்கிக்கொடுக்கப்பட்டது.

2004-ம் ஆண்டில் பணித்தளத்தில் 10 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டு சுதேச ஊழியர்களுக்கு 10 சைக்கிள் வாங்கிக்கொடுக்கப்பட்டது.

2005-ம் ஆண்டில் பணித்தளத்தில் 6 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டன.  மேலும் 2 பெரிய ஆலயமும் கட்டிக்கொடுக்கப்பட்டன.  சுதேச ஊழியர்களுக்கு 16 சைக்கிள்களும், இருசக்கர வாகனம் ஒன்றும், 1000 வேதாகமங்களும் வாங்கிக்கொடுக்கப்பட்டது.

2006-ம் ஆண்டில் பணித்தளத்தில் 2 கிராம ஆலயங்கள் கட்டப்பட்டன. மேலும் 1 பெரிய ஆலயமும் கட்டிக்கொடுக்கப்பட்டன.  சுதேச ஊழியர்களுக்கு 16 சைக்கிள்களும், 615 வேதாகமங்களும்  வாங்கிக்கொடுக்கப்பட்டது.

2007-ம் ஆண்டில் 2 பெரிய கிராம ஆலயங்கள் கட்டப்பட்டன.

2008-ம் ஆண்டில் 1 பெரிய கிராம ஆலயமும், சுதேச ஊழியருக்கு இருசக்கர வாகனம் ஒன்றும் வாங்கிக்கொடுக்கப்பட்டது.

2009-ம் ஆண்டில் 2 இலட்சம் மதிப்பில் 10 பெரிய கிராம ஆலயங்கள் கட்டப்பட்டன.

மேலும் 2000-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெற்ற பூமியதிர்ச்சி மூலம் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நிவாரண பணிகளும், ‘மணாபா’  என்ற கிராமத்தில்  53 வீடுகளும் ரூ.20 இலட்ச செலவில் கட்டிக்கொடுத்துள்ளோம்.

 மிஷனெரி பணித்தளத் தேவைகளை சந்திப்பதில் அதிக கரிசனையுடன் இருப்பதைக் கண்டு நாங்கள் தேவனைத் துதிக்கிறோம்.  தங்களுடைய அதிகமான ஊழியபாரத்தின் மத்தியிலும் தூத்துக்குடி, பாளையங்கோட்டை, நாசரேத், கோயம்புத்தூர், ஓசூர், மார்த்தாண்டம் பகுதிகளில் சிறப்பு மிஷனெரி கூட்டங்களை நடத்திக்கொடுத்தும் மிஷனெரிகளை பிரதிஷ்டை செய்தும் அநேகருக்கு ஊழியங்களை அறிமுகப்படுத்தின தலை சிறந்த ஊழியருக்காக தேவனைத் துதிக்கிறோம்.  எங்களை மட்டுமல்ல, அவர்களின் ‘இயேசு விடுவிக்கிறார்’ பத்திரிக்கையில், மற்ற வளர்ந்து வரும் தேவையுள்ள பிற சுவிசேஷகர்களை கிறிஸ்தவ உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நல்ல பண்புள்ள ஊழியரை தேவன் தந்துள்ளார்.  மேலும் நல்ல ஆலோசகராக இருந்து பல ஆலோசனைகளைக் கொடுத்து அவ்வப்போது பணித்தளத்திற்கும், ஊழியத்திற்கும் தேவையான உதவிகளைத் தந்து ஊழியங்களை தாங்கி வருகிறார்கள்.  எங்கள் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டு கடந்த 18 வருடங்களாக ஷாலோம் ஊழியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்கள்.

சகோதரி. ஜாய்ஸ் லாசரஸ் அவர்கள் தங்கள் ஊழிய அனுபவத்திலிருந்து பல ஆலோசனைகளைக் கொடுத்ததுண்டு.  நாங்களும் அனேக காரியங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளோம்.  அவர்கள் மூலமாக தேவன் கொடுத்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக தேவனைத் துதிக்கிறோம்.  எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும், ஊழியர்களை விசாரிப்பதிலும் உதவி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்துவார்கள்.  1998-ம் ஆண்டு சகோதரி அவர்களும் குஜராத் பணித்தளத்திற்கு வருகைதந்து எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினார்கள்.  சகோதரர் குடும்பத்திற்காகவும், ‘இயேசு விடுவிக்கிறார்’ ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

இறுதியாக எங்கள் குடும்பத்திற்காகவும், எங்கள் அன்பு பிள்ளைகளுக்காகவும், பீல் மக்கள் இரட்சிப்புக்காகவும் கண்ணீர் சிந்தி ஜெபிக்கிற தேவ ஊழியர் சகோ. மோகன் சி. லாசரஸ் பல முறைகளில் ‘இயேசு விடுவிக்கிறார்’ ஊழியம் வேறு ‘ஷாலோம் ஊழியம்’ வேறு என்று நான் கருதுவதில்லை என்று சொல்ல நான் கேட்டபோது என் உள்ளம் தேவனுக்குள் களிகூர்ந்தது.  இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் கல்வாரியின் அன்பினால் இணைக்கப்பட்ட சகோதர பாசமும், பரிசுத்த ஆவியானவர் தம்முடைய பிதாவினுடைய சித்தத்தை நிறைவேற்றும்படியாய் அவரால் பிணைக்கப்பட்ட இணைப்புமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.  நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மட்டும் அன்பிலும் ஐக்கியத்திலும் நாங்கள் இணைந்து, பாரத தேசத்தில் வாழும் 1 கோடி பீல் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் இணைந்து செயல்பட எங்களுக்காக ஜெபியுங்கள்.

 

“ இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது!”

(சங் 133 : 1)

 

Top^

 

<
ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு