ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
கிராம தேவாலயங்கள் ^

English Version

தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படியும் அவருடைய கிருபையினாலும் இதுவரை 410 பீல் ஆதிவாசி சுதேச ஊழியர்கள் மூலமாக 625 கிராமங்களில் ஆராதனைக் குழுக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  இந்த கிராமங்களில் விசுவாசிகள் பெரும்பாலும் மரத்தடியிலும், சிறிய குடிசைகளிலும், திறந்த வெளிகளிலும், சிறிய பந்தல்களுக்கு அடியிலும் கூடி ஆராதித்து வருகிறார்கள்.  மழை காலத்திலும் வெயில் காலத்திலும் குறிப்பாக விசுவாசிகள் அதிகரித்து வரும் காலங்களிலும் தேவனை ஆராதிக்க சரியான இட வசதியில்லாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு தேவை பெரிய கோபுரங்கள் உள்ள ஆலயங்கள் அல்ல.  40x20 சதுர அடி அளவில் எழுப்பப்பட்ட நான்கு சுவர்களுக்கு மேலாக பொருத்தப்பட்ட ஓடுகள் அமைந்த சிற்றாலயமே.  இதுவரை தேவனுடைய கிருபையினால் கடந்த 17 வருடங்களில் 195 ஆலயங்கள் எழுப்புவதற்கு தேவன் கிருபை செய்தார்.  அவருக்கே மகிமை செலுத்துகிறோம்.

.இந்த ஆலயங்கள் கட்டுவதற்கு அநேக ஊழிய ஸ்தாபனங்கள் மூலமாகவும், சபை மூலமாகவும், தனிப்பட்ட குடும்பங்கள் மூலமாகவும் தியாகத்துடன் கொடுக்கப்பட்ட காணிக்கையின் மூலம் கட்டப்பட்டுள்ளது.  அநேக சபைகள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தேவ பிள்ளைகள் தங்களுடைய பணி முதிர்வு தொகை மற்றும் சொந்த சேமிப்புகள் மூலமாகவும் தியாகத்துடன் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.  அவர்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

2010-ம் ஆண்டிற்குள் 1000கிராம ஆலயங்கள் கட்ட வாயப்புகள் உண்டு.  40x20 அளவில் சுமார் 150 பேர் கூடி  ஆராதிக்கக்கூடிய ஆலயங்கள் கட்டுவதற்கு ஓட்டினால் கூரை அமைக்க ரூ.50,000/- , ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் கூரை அமைக்க ரூ.1 லட்சம், கான்கிரீட் கூரை அமைக்க ரூ.2 லட்சம் செலவாகின்றது.

  1. உங்கள் குடும்பத்தின் சார்பிலோ, சபையின் சார்பிலோ, நீங்கள் செய்து வரும் ஊழியத்தின் மூலமாகவோ சபைகளைக் கட்டிக்கொடுக்கலாம்.

  1. நீங்கள் தொழில் செய்பவராயிருந்தால் வருடத்திற்கு 1 கிராம ஆலயம் கட்டித்தர முன் வரலாம். (தினம் ரூ.150/-  சேமித்து வைக்கலாம். (365xRs.150 = Rs.54,750)

  1. உங்களுக்காக வீடு கட்டும்பொழுதும் வீட்டில் திருமண காரியங்கள் நடைபெறும்போதும் தேவன் உங்களை அதிகமான பணம் தந்து ஆசீர்வதிக்கும் வேளையிலும் பொருத்தனையாக தேவனுக்கு மகிமையுண்டாக கிராம ஆலயங்கள் கட்டித் தரலாம்.

Rs.1,00,000/-         (Size 30X18)
Rs.2,00,000/-        (Size  40X20)
Rs.3,00,000/-         (Size 50X20
)

“நீங்கள்.....ஆலயத்தைக் கட்டுங்கள், அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” ஆகாய் 1:  8

 

     

ஷாலோம் ஆலயங்கள் - மாநிலம் வாரியாக

 ராஜஸ்தான்

மத்திய பிரதேசம்

குஜராத்

கும்புரா கிராம தேவாலயம்

விஷால்பூர் கிராம் தேவாலயம்

 
     
     

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு