ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
பெண்கள் ஊழியம் ^

 English Version

பீல் ஆதிவாசி பெண்கள் மத்தியில் ஆவியானவர்

பீல் ஆதிவாசி பெண்கள் எளிமையான, கல்வி அறிவு இல்லாத மற்றும் நாகரீகமற்ற முறையில் வாழ்பவர்கள்.  ஆனால் விசுவாசிகளான பெண்கள் இயேசுவின் மீது அலாதி பற்றுள்ளவர்கள்.  தங்கள் சொந்த ஜனம் இரட்சிக்கப்பட வேண்டும் என்று கருத்தாய் திறப்பில் நின்று ஜெபிக்கின்றார்கள்.

சுதேச ஊழியர்களின் மனைவிமார்களின் உபவாச ஜெபக் கூடுகையை நிசி ஜெபக்குழு என்று அழைக்கிறோம்.  மத்தியபிரதேசத்தில் பெண்கள் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமையன்றும், குஜராத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்றும், இராஜஸ்தானில் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்றும் பல குழுவாகக் கூடி உபவாசித்து ஜெபிக்கின்றார்கள். “ஜெபமே ஜெயம்”   என்பதை இவர்கள் உணர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.  மட்டுமல்லாமல் ஜாலோத் அலுவலகத்தில் உள்ள பெண்கள் தினமும் மாலை ஒரு மணி நேரம் பீல் மக்கள் மத்தியில் எழுப்புதல் வர ஜெபிக்கிறார்கள்.

படிப்பறிவு அற்ற (பள்ளிக்கூடமே செல்லாத) பெண்கள் சிலர் இயேசுவை ஏற்றுக்கொண்டு அபிஷேகம்பெற்ற பின் தாங்களும் பைபிள் வாசிக்க வேண்டுமென்று வாஞ்சித்து முயற்சித்தார்கள்.  தேவன் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். 

ஞானத்தை கொடுத்திருக்கிறார்.   இப்பொழுது நன்கு வேதத்தை வாசிக்கிறார்கள்.  சுமார் 375 சுதேச  ஊழியர்களின் மனைவிமார்களும் அபிஷேகம் பெற்று ஊழியர்களுக்கு துணையாய் நின்று ஊழியம் செய்கிறார்கள்.   உலக அறிவு, ஞானம் இல்லாத இந்த மக்கள் தரிசனங்களைக் காண்கிறார்கள். சிலர் இந்திய தேசப்படத்தை தரிசனத்தில் பார்த்து, இந்தியாவுக்காக ஜெபிக்கின்ற பாரத்தைப் பெற்றுள்ளார்கள்.  தங்கள் கிராமங்களில் அக்கினி விழுவதாகவும் பெரிய ஆலயங்கள் கட்டப்படுவதாகவும் தரிசனங்களைப் பெற்று கிறிஸ்துவுக்குள் உறுதியாய் நிலைத்து ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். மட்டுமல்லாமல் அநேக சுதேச  ஊழியர்களின் மனைவிமார்கள் ஆத்துமாக்களுக்காக கண்ணீரோடு அழுது திறப்பின் வாசலில் நின்று புலம்பும் கிருபையைப் பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறாக பீல் ஆதிவாசி பெண்கள் ஜெப வாழ்க்கையிலும் வேத வசனங்களிலும் அபிஷேக வாழ்க்கையிலும், ஈகையிலும் முன்னேறி வருகிறார்கள்.  நிச்சயமாக பீல் ஆதிவாசி பெண்களின் ஜெபத்தின் மூலம் பீல் மக்கள் மத்தியிலும் எழுப்புதல் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

                   

 

 

 

         

 

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு