ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
சுதேச ஊழியர்கள் ^

English Version

ஏன் சுதேச ஊழியர்களை எழுப்ப வேண்டும்?

   

சகல ஜாதிகளையும் சீஷராக்க வேண்டும் என்ற தேவனுடைய கட்டளை.

“பீலி“ மொழியை பிற மாநிலத்திலிருந்து வந்து மிஷனெரிகள் கற்றுக்கொள்வது கடினம்.  நாம் கற்றுப் பேசுவதைவிட எளிதாக அவர்கள் தம் தாய் மொழியில் சுவிசேஷத்தை அறிவிப்பார்கள்.

ஆதிவாசி மக்களின் கலாச்சாரம் வித்தியாசமானது.  ஏதோ  வெளியூரிலிருந்து வந்தவர்கள் நம் கலாச்சாரத்தை அழித்துவிடுவார்கள் என்ற அச்சத்திற்கு நீங்கலாவார்கள்.

சுதேச ஊழியர்கள், மிஷனெரிகளைக் காட்டிலும் அதிகமான நேரம் கிராம மக்களுடன் செலவிடுவார்கள்.  அவர்களுக்கு இடமாறுதல் பிரச்சனை (Transfer) கிடையாது.

 எதிர்ப்புகள் அதிகமாகும்போது மிஷனெரிமார்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.  இல்லையெனில் அதிகமாக தொல்லைகள், கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.  ஆனால் சுதேச ஊழியர்கள் தங்கள் கிராமத்தைவிட்டு போக முடியாது. மற்றவர்கள்  வெளியேற்ற முடியாது.  அவர்களுக்கு வரும் இன்னல்கள், கஷ்டங்கள் இவைகளை (ஜெபத்துடன்) தாங்கும்போது சிறிது காலத்தில் அவைகள் நீங்கி விடுகிறது.

 வெளியிலிருந்து வரும் மிஷனெரிகளைப் பொறுப்பெடுக்கும் செலவினங்களைவிட சுதேச ஊழியர்களை பொறுப்பேற்று நடத்துவது இலகுவாகும்.

 வெளிநாட்டு மிஷனெரிகள் காலம் முடிந்து தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்குச் செல்லும் ஊழியர் காலம் மாறி வருகிறது.  3000 ஜாதிகள் வாழும் பாரத தேசத்தில் அந்தந்த ஜாதிகள் மத்தியில் சுதேச ஊழியர்கள் எழுப்பப்பட்டால்தான் நம் தலைமுறையில் நம் தேசம் நம் தேவனை அறியும்.

 குஜராத், இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மூன்று மாநிலங்களில் நம்முடைய சுதேச ஊழியர்ள் மூலமாக பீல் மக்கள் மட்டுமல்லாமல் மற்ற இனத்தவர்களையும் சந்திக்கும்படியாக அவர்களே நற்செய்தி பணியாளராக புறப்பட்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 தற்போது அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களும் சுதேச ஊழியர்களை அதிகமாக உருவாக்கி, பயிற்றுவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.  தேவன் Sharing Love Mission-க்கு கொடுத்த பிரதானமான தரிசனம் பீல் சுதேச ஊழியர்களை உருவாக்குவதே.   

     

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு